மாணவர்களின் முன் தப்பான வீடியோவை ஒளிபரப்பிவிட்டு தடுமாறிய ஆசிரியர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 09, 2018 04:50 PM
Teacher Plays wrong clip Accidentally during the session Viral Video

எழுத்தாளர்களுக்கு அடுத்து மாணவர்களும் குழந்தைகளுமே சமூகத்தின் கண்ணாடிகள் என்று சொல்லும் அளவுக்கு, தன்னைச் சுற்று நடப்பதை கிரகித்து உள்வாங்கிக்கொள்ளும் தன்மை கொண்டவர்கள். அதிலும் அந்த பருவம் நன்மை, தீமைகளை அறியாது எல்லாவற்றையும் ஆய்வு நோக்கின்று உள்வாங்கிக்கொள்ளும் திறன் படைத்தது.


இந்த பருவத்தில் உறுதுணையாக இருக்க வேண்டிய, எல்லாவற்றையும் கற்றுத் தரும் ஆசான்கள் எனப்படும் ஆசிரியர்கள் முக்கியமானவர்கள். அவர்களின் வழிகாட்டுதல் இன்றியே அவர்களை பின் தொடரும் வகையில் மாணவர்கள் இருக்கும் சூழலில், ஆசிரியர் ஒருவர் புரொஜக்டரை வைத்துக்கொண்டு பாடம் நடத்தும்போது தவறுதலாக, ஆபாச வீடியோவை ஒளிபரப்பிவிட்டதால் திடீரென மாணவர்கள் கூச்சலிடவும் வகுப்பறை திக்குமுக்காடியுள்ளது.


தெரிந்தே சில நோக்கங்களுக்காக இதுபோன்று ஆசிரியர்கள் செய்வதுண்டு என்றாலும், இந்த ஆசிரியர், புரொஜக்டரில் தன் லேப்டாப்பை இணைத்து வீடியோக்களை காண்பித்து  வகுப்பு நடத்திவந்த நேரம், திடீரென தவறுதலாக ஆபாச வீடியோவை தட்டிவிட்டுள்ளார். அதன் பின்னர் மாணவர்கள் பலர் முகத்தை தடாலென மூடிக்கொண்டதையும், சலசலத்ததையும் கண்டவர், தான் தவறாம வீடியோவை ஒளிபரப்பியதை அறிந்து குற்றவுணர்ச்சியுடன் நெளிந்து வீடியோவை உடனடியாக நிறுத்தியுள்ளார். இதனை அங்கிருந்த மாணவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த வீடியோவில் ஆசிரியர் ஒளிபரப்பு செய்த வீடியோ மங்கலாகவும், ஆசிரியரின் குற்றவுணர்வு மற்றும் மாணவர்களின் கூச்சல் தெளிவாகவும் பதிவாகியுள்ளது.


ஆசிரியர் தனது லேப்டாப்பில் ஆபாச படத்தை வைத்துள்ளாரா? அல்லது அந்த வீடியோவே அங்கு தவறுதலாக அந்த கணினியில் இருந்துள்ளதா என்று தெரியவில்லை எனினும், இந்த சம்பவம் லண்டனில் வைரலாக பேசப்பட்டு வருவதோடு, மாணவர்களுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியரே இவ்வாறு நடந்துகொண்டது விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

Tags : #SCHOOLSTUDENT #COLLEGESTUDENT #VIRAL #TEACHER #UK #VIRALVIDEO #BUZZ