WATCH VIDEO: 'நெவர் எவர் கிவ் அப்'..உலகத்தின் மிகச்சிறிய 'திக் திக் ஹாரர்' ஸ்டோரி!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 05, 2018 03:43 PM
Watch Video: Bear Cub Tries to Climb a Snow Mountain

நேற்று முதல் இணையத்தை ஒரு கரடிக்குட்டி கலக்கி வருகிறது. இதைப்பார்த்த அனைவரும் உலகத்தின் மிகச்சிறிய ஹாரர் படம் இதுதான் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்து வருகின்றனர்.

 

விஷயம் இதுதான். ஒரு தாய்க்கரடி தனது குட்டியுடன் 300 அடி உயரமுள்ள பனிமலை ஒன்றின் மேல் ஏறுகிறது. தாய்க்கரடி மிகச் சாதாரணமாக ஏறிவிட, குட்டிக்கரடியால் மலை ஏற முடியவில்லை. எனினும் தனது முயற்சியில் சற்றும் மனம் தளராமல் மீண்டும், மீண்டும் மலை மேல் ஏறி குட்டிக்கரடி கீழே விழுகிறது.

 

இதனைப்பார்க்கும் தாய்க்கரடி பரிதவிக்கிறது. ஆனால் அதனால் ஒன்றும் செய்ய இயலாமல் தவிக்கிறது.கடைசியில் ஒருவழியாக குட்டிக்கரடி மலை ஏறிவிட, இந்த வீடியோவைப் பார்த்த அனைவரும் உலகத்தின் மிகச்சிறிய ஹாரர் படம் இதுதான் என கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #BEAR #MOUNTAIN #VIRALVIDEO