இடி சத்தத்திற்கு பயந்து வளர்ப்பு நாய் ஒளியும் இடத்தை பாருங்கள்! வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 05, 2018 06:04 PM
perfect place for this dog to hide during a thunder storm viral video

நாய்களுக்கு வெயில் காலத்தில் கதகதப்பான இடமும், மழைக்காலத்தில் வெதுவெதுப்பான இடங்களும் , அவற்றின் தேகத்தில் இருக்கும் சீதோஷ்ணத்தை பராமரிக்க தேவையான பருவச் சூழலாக இருக்கிறது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்களைப் பொறுத்தவரை, மிகவும் செல்லமாக வளர்ந்துவிடுவதால், அதிக குளிரையும் அதிக தகித்தலையும் தாளமுடிந்தால் அதிசயம்தான்.


சில நாய்கள் அதே மழைக்காலத்தில்  குளிரைக் கூட தாங்கிவிடும், ஆனால் அப்போது தோன்றும் இடி சத்தத்திற்கு பயம் கொள்கின்றன. பெரும்பாலும் குட்டி நாய்க்குட்டிகள்தான் இவ்வாறு இருக்கக் கூடும்.  ஆனால் நாய் ஒன்று இடி சத்தத்திற்கு பயந்து வீட்டில் எங்கோயே ஓடி ஒளிந்துகொண்டது என்று அதன் வளர்ப்பாளர்கள் தேடிக்கொண்டே செல்ல, அந்த நாய் வீட்டில் இருக்கும் வாஷின் மெஷினின் துணிகளை அலசும் டிராயருக்குள் சென்று அமர்ந்துகொண்டிருக்கும் காட்சி வைரல் வீடியோவாக இணையத்தில் உலா வருகிறது.


இடி சத்தம் கேட்டதும் பயந்து போன இந்த நாய் ஓடிச்சென்று என்ன செய்வது என்று அறியாமல், பாதுகாப்பாக வாஷிங் மெஷினுக்குள் சென்று தஞ்சம் புகும் அளவுக்கு யோசித்திருக்கும் இந்த சேட்டை மிகுந்த நாயை பலருக்கும் பிடித்துப்போக இந்த வீடியோவை பகிர்ந்துவருகின்றனர்.

 

Tags : #DOG #RAIN #THUNDERSTORM #WASHINGMACHINEDOG #CRAZYDOG #VIRAL #VIDEO #DOGSTORY #AMAZINGDOGS #VIRALVIDEO #GREATVIRALVIDEO