எஜமானி கேட்டதும், ‘ஐ லவ் யூ’ சொல்லும் குறும்பு நாய்.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 05, 2018 04:18 PM
This Dog Tries to Tell I Love You to his Owner Video Goes Viral

பொதுவாகவே விலங்கினங்கள் ஓரிரு வார்த்தைகள் பேசக்கூடியதாக இருப்பன. மாடு அம்மா என்றும் ஆடு அம்மே என்றும் பேசுவது போல கிளிகளும் பேசுவதுண்டு. சில இடங்களில் கிளிகள், மணிப்புறா, சிட்டு உள்ளிட்டவை மனிதர்களைப் போலவே மொழி அறிந்துகொண்டு பேசவும் செய்திருக்கின்றன. அதிலும் கிளி திரும்ப திரும்ப நாம் சொல்வதை அப்படியே சொல்லிக்காட்டும் தன்மை உடையதால், அதனால் எளிதாக மனிதர்களின் மொழியை கற்றுக்கொண்டு உரையாட முடிகிறது.


எனினும் நாய் போன்ற செல்லப் பிராணிகளை பேச வைப்பது என்பது சற்று அரிதான காரியம்தான். மேலை நாட்டில் உள்ள மேகன் எனும் ஒரு பெண்மணி தனது வளர்ப்பு நாயான, ஹஸ்கிக்கு ஐ-லவ்-யூ என சொல்வதற்கான பயிற்சியை வழங்கியிருக்கிறார்.

 

அதன்பிறகு அவர் ஐ-லவ்-யூ என்று சொல்லிக் காட்டியதும், பதிலுக்கு ஹஸ்கி எனும் அந்த நாய், தானும் நீளமாக  ஐ-லவ்-யூ என்று கத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Tags : #VIRAL #VIDEO #DOG #ILOVEYOU #TALKINGDOG #HUSKY #MEGAN