‘உங்கள் முதலாளியிடம் சொல்லுங்கள்’..மனதை உருக்கும் மழலையின் பேச்சு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 03, 2018 06:08 PM
Video of Kiren Rijiju\'s daughter speech goes viral

மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ. டெல்லியில் பள்ளி பயிலும் இவரது மகள் இவருடன் பேசும் பல வீடியோக்கள் நவீன காலமாக இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஒரு வீடியோவில், ‘என் பள்ளியில் தாத்தா பாட்டிகள் தினம் இருக்கிறது. 

 

ஆனால் ஊரில் இருக்கும் தாத்தா பாட்டிகள் வரமுடியாமல் இருக்கின்றனர். மேலும் நீங்கள் எப்போதும் பிஸியாக இருந்தால் நான் என்ன செய்வது. நீங்கள் என் பள்ளிக்கு வரவேண்டாமா.. எப்போதும் அம்மாவே வருகிறாரே.. இம்முறை நீங்கள்தான் வர வேண்டும்’ என்று கூறுகிறாள்.


அதற்கு பதில் அளிக்கும் ரிஜிஜூ தான் பிஸியாக இருப்பதாகவும் தனக்கு நிறைய வேலைகள் இருப்பதாகவும் கூற, ’அதனால் என்ன.. உங்கள் முதலாளியிடம் சென்று நான் என் மகள் படிக்கும் பள்ளியில் நடக்கும் விழாவுக்கு செல்லப் போகிறேன் என்று சொல்லுங்கள்.. எதுவும் சொல்ல மாட்டார்கள்’ என்று மழலைக் குரலில் பேசி தந்தையை உருக்கி சாதூரியமாக சம்மதம் வாங்கியுள்ளார்.

 

இதனை ட்விட்டரில் வெளியிட்டுள்ள அவர், ‘இப்படி பேசித்தான் என் மகள் அவளுடைய பள்ளி விழாவில் கலந்துகொள்வதற்கு என் மனதை மாற்றினாள்’ என்று கூறி பதிவிட்டுள்ளார்.

 

Tags : #KIRANRIJIJI #MINISTER #GIRL #VIRAL #VIDEO #SCHOOL #DAUGHTER