திடீரென பாரில் புகுந்த குதிரையால் குடிமகன்கள் பதற்றம்.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Oct 04, 2018 03:12 PM
Horse breaks into bar Bizarre Video goes Viral on Air

குதிரை ஒன்று பாருக்குள் வேகமாக ஓடியதில், மது அருந்திக்கொண்டிருந்தவர்கள் சிலருக்கு தலைகால் புரியாமல் பதற்றமாகி ஒளிந்துகொள்ளத் தொடங்கியிருக்கின்றனர்.


டெல்லியில் உள்ள பிரபல மதுக்கடை ஒன்றில், மது பிரியர்கள் மது ஆயாசமகா அமர்ந்து மது அருந்திக் கொண்டிருக்கும்போது அவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், அப்போது அத்தனை பெரிய குதிரை திடீரென உள்ளே ஓடிவரப் போகிறது என்று.  ஆனால் அவர்களிடையே திடீரென உள்ளே நுழைந்தபடி ஓடிவந்த குதிரையைக் கண்டவுடன் பலருக்கும் அடித்த மதுவின் போதை இறங்கி, அங்கங்கே தெறித்து ஓடத் தொடங்கியுள்ளனர்.


எங்கிருந்தோ தன்னை விடுவித்துக்கொண்டு தப்பித்து ஓடிவந்ததுபோல தோன்றிய அந்த குதிரை சில விநாடிகளில், பாருக்குள் நுழைந்து இத்தகைய களேபரத்தை செய்துவிட்டு, மிக இயல்பாக மற்றொரு புற கதவின் வழியே வெளியேறிவிட்டது. அங்கு கூடியிருந்தவர்களை இந்த திடீர் சம்பவம் மிரட்சிக்குள்ளாக்கியது.

 

Tags : #HORSE #VIRAL #VIDEO #BIZARRE