நிவாரண முகாம்களை தயார் நிலையில் வையுங்கள்...தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Oct 04, 2018 12:31 PM
India Meteorological Department has give Red Alert to Tamilnadu

தமிழகத்தில் நேற்று முதல் பரவலாக மழை பெய்துவருகிறது.இந்நிலையில் வரும் 7-ம் தேதி கடுமையான மழை பொழிவு இருக்கும் என்பதால் வானிலை மையம் சார்பாக ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

 

அக்டோபர் 7-ஆம் தேதி 25 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  தமிழகத்தில் நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மக்கள் அபாயகரமான இடங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

Tags : #RAIN #RED ALERT