ரெயின் கோட் அணிந்து மழையில்.. இப்ப இதுகளும் இப்படி கெளம்பிடுச்சா!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 26, 2018 06:02 PM
A puppy walks in the rain by wearing a cutest little raincoat

திடீரென மழை வர வாய்ப்பு உள்ளதா என்று முன்கூட்டியே அறிந்து அதற்குத் தகுந்தாற்போல், ரெயின் கோட் எடுத்துச் செல்பவர்கள் பலர் உண்டு.  மனிதர்களுக்குத் தகுந்த ரெயின் கோட் மிகவும் பரவலாக தயாரிக்கப்படுவதால், எளிதில் வாங்கிவிடலாம். ஆனால் இங்கு ஒரு அடைமழையில், முழங்கால் உயரம் கூட இல்லாத ஒரு குட்டிநாய்க்குட்டி அதன் சைஸூக்கு தகுந்த ஒரு ரெயின் கோட்டை போட்டுக்கொண்டு, ’என்ன எவண்டா கேப்பான்’ என்பதுபோல் ஒய்யாரமாக நடுரோட்டில் நடந்து, சாலையைக் கடந்து செல்வதை பார்க்கும்போது ரசிக்கும்படியாக உள்ளது. 


இந்த நாய்க்குட்டியின் வளர்ப்பாளர்கள் இந்த நாய்க்குட்டியின் உடலுக்கு ஏற்ற சைஸுக்கு தகுந்த ரெயின் கோட்டை தைத்து கொடுத்திருக்கின்றனர்.  அதுவுன் தன்னியல்பாக மழையில் நடந்துபோகும் காட்சி இணையத்தில் வீடியோவாக வைரலாகி வருகிறது.

 

Tags : #PUPPY #PUPPYSTORIES #VIRAL #VIDEO #RAIN #RAINCOAT #RAINCOATPUPPY