’இயற்கை’ முறையில் திருமணம் செய்த இத்தாலி தம்பதியர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Sep 24, 2018 06:03 PM
Italian couple\'s nude marriage photos goes viral

இத்தாலியைச் சேர்ந்த இளம் தமதியர்கள் ஆடைகள் இன்றி, ஆதிவாசி முறையில் திருமணம் செய்து இணையத்தில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர்.  வைரலாகும் இந்த புகைப்படங்கள் மூலம் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ள தம்பதியினரின் பெயர் வேலண்டின் மற்றும் ஆன்கா ஆர்சன்.


காதலித்து வந்த இந்த தம்பதியர் தத்தம் பெற்றோர்களின் சம்மதத்தோடு இத்தகைய நூதன திருமணத்தைச் செய்ய ஆலோசித்துள்ளனர். மேலும் துணை மாப்பிள்ளைக்கும் மணப்பெண் தோழிக்கும் இருவரை உடன் அழைத்துச் சென்றுள்ளனர். அவர்களுக்கும் இதே சடங்குதான்.


இயற்கை ஆர்வலர்களான இவர்கள் இருவரும் பிறந்த பூமியையும் உயிரியல் தகவமைப்பின் மகத்துவத்தையும் போற்றும் வகையில், ஆதிவாசிகளை போல் ஆடைகளற்று, இத்தாலியின் தனித்தீவொன்றில் இயற்கை சாட்சியாக திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

Tags : #ITALY #COUPLE #MARRIAGE #VIRAL