ரொம்ப ஓவரா போன கஸ்டமர்..முகத்தில் கேக்கை எடுத்து அப்பிய வெயிட்டர்.. வைரல் வீடியோ

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 05, 2018 01:27 PM
waiters takes the drastic action due to the rude behaviour of customer

உணகவகத்தில் உணவருந்தும் கஸ்டமருக்கும் அங்கு பணிபுரியும் வெயிட்டர்களுக்கும்  இடையில் நிகழ்ந்த ஒரு சம்பவம் இணையத்தில் வைரலாக வீடியோவாக பரவி வருகிறது. 

 

லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு இரண்டு பெண்கள் உணவருந்த சென்றுள்ளனர்.  அவர்களிடம் பேச வந்த வெயிட்டரிடம் ஒரு பெண் சற்று குரலை உயர்த்தி பேசியுள்ளார். உடனடியாக அருகில் இருந்த இன்னொரு வெயிட்டர் கைகளில் கேக்கை எடுத்து வைக்கிறார். அப்போது இன்னொரு பெண்மணியும் சற்று குரலை உயர்த்தி கடுமையான சொற்களை பேசவும் கோவப்பட்ட வெயிட்டர் தான் கையில் வைத்திருந்த கேக்கை கொண்டு அந்த பெண்மணியின் முகத்தில் அப்பியிருக்கிறார். 

 

இதைப் பார்த்துக்கொண்டிருந்த இன்னொரு பெண் தண்ணீரை எடுத்து அந்த வெயிட்டர் மீது ஊற்ற அந்த இடமே களேபரமாகிறது. இதில் யார் மீது தவறு, யார் பக்கம் நியாயம் என்பது சரியாக புலப்படவில்லை என்றாலும், கஸ்டமர்களின் அடாவடித் தனமான-அதிகாரத் தனமான நடவடிக்கைகளால் அதிருப்தியும் ஆத்திரமும் அடைந்ததால் தனது வெயிட்டர்கள் இவ்வாறு செய்ததாக அந்த உணவகத்தின் மேலாளர் கூறியுள்ளார். 

Tags : #VIRAL #VIDEO #CUSTOMER #WAITER #RESTAURANT