இதுதான் தீபாவளி ஆஃபர்: 3 நாட்களுக்கு தியேட்டர்களில் கூடுதல் காட்சி திரையிட தமிழக அரசு அனுமதி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 05, 2018 01:06 PM
TN Government allows TN Theatres to run Additional shows in these days

தமிழ்நாட்டில் பண்டிகை காலங்களை ஒட்டி, திரையரங்குகளில் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் மாஸ் ஹீரோக்களின் படங்கள் வரிசையாக வெளிவிடப்படுவது எல்லாம் பண்டிகை நேரத்தில்தான் என்பதால் அனைத்து திரையரங்குகளும் பிஸியாக ஹவுஸ்ஃபுல்லாக படங்களை ஓட்டுகின்றன.

 

எனினும் பலருக்கும் பண்டிகை நாட்களில் நினைத்த படங்களுக்கான டிக்கெட் கிடைப்பது கடினமாகவே இருக்கின்றன. அதனால் தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சார்பில் திரையரங்குகளில் கூடுதலாக ஒரு காட்சியை ஓட்டுவதற்கான அனுமதி கோரப்பட்டிருந்தது.

 

இதனை அடுத்து இந்த பண்டிகை நாட்களில் கூடுதலாக ஒரு திரைக்காட்சி ஓட்டுவதற்கான அனுமதியினை தமிழக அரசு அறிவித்துள்ளது. தினசரி நான்கு காட்சிகள் ஓட்டும் திரையரங்குகள் தீபாவளி மட்டுமல்லாது, வரும் நவம்பர் 7, 8, 9 ஆகிய 3 நாட்களுக்கும் இதே போல் கூடுதல் காட்சிகளை திரையிடுவதற்கான அனுமதியினை தமிழக அரசு வழங்கியுள்ளது.

Tags : #TAMILNADU #THEATRE #SHOW #SCREENING #TICKETS #FESTIVAL #DIWALI