நைஸாக பூனைக்குட்டி போல் தலைமைச் செயலக வளாகத்துக்குள் நுழையும் சிறுத்தை.. வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 05, 2018 11:24 AM
Leopard entered Secretariat premises in Gujarat Video goes Viral

சிறுத்தை மற்றும் புலிகளின் புகலிடமாக திகழந்த காடுகள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. வனமிருகங்கள் நகரங்களை நோக்கி படையெடுக்கத் தொடங்குவதற்கு அவற்றின் வாழிடங்களில் நீர் நிலைகள் தொட்டு, இரைப்பஞ்சம் வரை எத்தனையோ காரணங்கள் உள்ளன. 

 

மேலும் பெருகி வரும் நகரக் கட்டமைப்புச் சூழல் காரணமாக சிறுத்தை ஒன்று நகரத்துக்கும் காட்டுக்குமான திக்கு திசைகள் தெரியாமல், குஜராத் தலைமைச் செயலக வளாகத்துக்குள் புகுந்துள்ள சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

அரவும் தெரியாமல், ஆள்போலவே கேட்டுக்கு அடியில் புகுந்து, அதிகாலை வேளையில் நைஸாக உள் நுழையும் சிறுத்தையை சிசிடிவி காட்சிகளில் பார்த்த பின்பு காவல் துறையினரும் வனத் துறையினரும் அரண்டு போய் சிறுத்தை எங்கிருந்து வந்தது எங்கு போக முயற்சித்துள்ளது என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.

 

Tags : #VIRAL #VIDEO #CCTV #LEOPARD #GUJARAT