WATCH VIDEO: 'அரைகுறை ஆடையுடன்'.. கிரிக்கெட் மைதானத்தில் ஓடிப்பிடித்து விளையாடிய நபர்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 12, 2018 12:53 PM
Streaker run naked during test match in Sri Lanka Cricket ground

கிரிக்கெட் மைதானத்தில் வெறும் சார்ட்ஸ் உடன் இங்கிலாந்து நபர் ஓடிப்பிடித்து விளையாடிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இங்கிலாந்து அணி தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. வெளிநாடுகளில் 13 டெஸ்ட் தொடர்களில் இங்கிலாந்து வெற்றியை சுவைக்காமல் இதுநாள்வரை இருந்தது. அதனை உடைத்து முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கையை அதன் சொந்த மண்ணில், கடந்த வெள்ளிக்கிழமை இங்கிலாந்து அணி வென்றது.

 

போட்டி முடிவுக்கு வந்த தருவாயில் இங்கிலாந்து ரசிகர் ஒருவர் கிரிக்கெட் மைதானத்தில் உள்ளாடையுடன் புகுந்து ஓடினார். இதனைப்பார்த்த போலீசார் அவரைத் துரத்தினர். சுமார் 10-க்கும் மேற்பட்டோர் துரத்தியும் கூட அவர்கள் அனைவருக்கும் அந்த நபர் தண்ணி காட்டினார்.

 

இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருவழியாக இந்த கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்தது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.