'அன்பான கணவன்-பொறுப்பான தந்தை'.. சென்னை மேட்ரிமோனி நிறுவனத்தின் விளம்பரத் தூதுவரான தல!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 13, 2018 11:56 AM
Bharat Matrimony ropes in MS Dhoni as Brand Ambassador

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வீரருமான எம்.எஸ்.தோனி பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் விளம்பரத்தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் தலைவர் முருகவேல் ஜானகிராமன்,'' இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த கேப்டன், அன்பான கணவர், பொறுப்பான தந்தை என அனைவருக்கும் பிரியமான எம்.எஸ்.டி, பாரத் மேட்ரிமோனியின் விளம்பரத்தூதராக இணைவது பெருமையாக உள்ளது” என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

 

பாரத் மேட்ரிமோனி நிறுவனத்தின் விளம்பர தூதுவராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறித்து தோனி கூறுகையில்,'' கடந்த 18 வருடங்களாக திருமண ஏற்பாடு சேவைகளில் முன்னணியில் உள்ள பாரத் மேட்ரிமோனி நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி,'' என தெரிவித்துள்ளார்.

 

விரைவில் தோனி இடம்பெறும் பாரத் மேட்ரிமோனி நிறுவன விளம்பரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #MSDHONI #CRICKET #BHARATMATRIMONY