'கஜா புயல் எதிரொலி'..பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை நீக்க உத்தரவு!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 13, 2018 11:21 AM
Puducherry municipality ordered remove banners and cutouts due to Gaja

கஜா புயல் எதிரொலியால் அரசியல்வாதிகள், நிறுவனங்கள் வைத்துள்ள கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு புதுச்சேரி நகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல் வருகின்ற 15-ம் தேதி இரவு சென்னை-கடலூர் இடையே கரையைக் கடக்கும் என சென்னை வானிலை தெரிவித்து இருந்தது. இதன் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர், விழுப்புரம், கடலூர், காரைக்கால் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

 

இந்தநிலையில் கஜா புயல் கடலூர்-பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என, சென்னை வானிலை மையம் புதிய தகவலை வெளியிட்டு உள்ளது. இதனால் புதுச்சேரி மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்கள் வைத்துள்ள கட்-அவுட்டுகள் மற்றும் பேனர்களை அகற்றுமாறு நகராட்சிகள் உத்தரவு பிறப்பித்துள்ளன.

 

மேலும் சாலைகளில் கட்டுமானப் பொருட்கள் வைத்து இருந்தால், அதனையும் அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Tags : #HEAVYRAIN ##GAJACYCLONE