"ஓப்பனிங் பார்ட்னெர்ஷிப் உடைந்தது"....முக்கிய வீரர்களை கழற்றிவிட்ட சன் ரைசர்ஸ்!

Home > News Shots > தமிழ்

By Jeno | Nov 16, 2018 10:36 AM
IPL 2019:17 players retained and 9 players released in Hyd Sunrisers

அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக,ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரரும், துணை கேப்டனுமான டேவிட் வார்னரைத் தக்கவைத்துள்ளது சன் ரைசர்ஸ் ஹைதராபாத்.அதோடு 9 வீரர்களை அணியிலிருந்து நீக்கியுள்ளது.

 

கடந்த சீசனில் விளையாடிய வீரர்களில் 17 பேரைத் தக்கவைத்துள்ளது சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம்.அதோடு நீக்கப்பட்ட 9 வீரர்களில் முக்கியமானவர் ஷிகர் தவண்.இவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.இந்நிலையில் கடந்த சீசனில் காயம் அடைந்த சஹா இன்னும் காயத்திலிருந்து மீளாத காரணத்தினால் அவரையும் அணியிலிருந்து நீக்கியுள்ளது.

 

மேலும், அயல்நாட்டு வீரர்களான அலெக்ஸ் ஹேல்ஸ், மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிராத்வெய்ட், கிறிஸ் ஜோர்டன் ஆகியோரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். முக்கிய வீரர் ஷிகர் தவணை டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு வழங்கிவிட்டு, அதற்குப் பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கர், அபிஷேக் சர்மாஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

இந்நிலையில் அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட, தக்கவைக்கப்பட்ட மற்றும்,மாற்றப்பட்ட வீரர்களின் பட்டியலை ட்விட்டரில் வெளியிட்டுள்ளது சன் ரைசர்ஸ் அணி நிர்வாகம்.

 

தக்கவைக்கப்பட்ட வீரர்கள் விவரம் :

பாசில் தம்பி, புவனேஷ்வர் குமார், தீபக் ஹூடா, மணிஷ் பாண்டே, நடராஜன், ரிக்கி புகி, சந்தீப் சர்மா, கோசாமி, சித்தார்த் கவுல், கலீல் அகமது, யூசுப் பதான், ஸ்டான்லேக், டேவிட் வார்னர், கானே வில்லியம்ஸன், முகமது நபி, ரஷித் கான், சஹிப் அல்ஹசன், அபிஷேக் சர்மா, விஜய் சங்கர், ஷாபாஸ் நதீம்

 

விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:

சச்சின் பே, தன்மே அகர்வால், விர்த்திமான் சஹா, கிறிஸ் ஜோர்டான், பிராத்வெய்ட், அலெக்ஸ் ஹேல்ஸ், பிபுல் சர்மா, சயது மெஹதி ஹசன், ஷிகர் தவண்.

Tags : #IPL #SUNRISERS-HYDERABAD #IPL 2019 #DAVID WARNER #SHIKHAR DHAWAN