'சிறந்த ஆல்ரவுண்டர் போட்டி' மோதிக்கொண்ட அணிகள் .. ஒரே அக்கப்போரா இருக்கே!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 15, 2018 01:31 PM
#IPL2019: Find a better all rounder trio,We will wait says MI

சிறந்த ஆல்ரவுண்டர் யார்? என மும்பை-ஹைதராபாத் அணிகள் மோதிக்கொண்டன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இணைந்ததால், இந்த விவகாரம் சூடு பிடித்துள்ளது.

 

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி வரும் ஹர்திக் பாண்டியா தனது தம்பியும் மும்பை வீரருமான க்ருணால் பாண்டியா மற்றும் மற்றொரு மும்பை வீரர் பொல்லார்டு ஆகியோருடன் புகைப்படம் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டார். இதனைப்பார்த்த மும்பை அணி, ''இதனை விட சிறப்பான ஆல்-ரவுண்டர்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்,'' என அவர்களைக் கிண்டல் செய்தது.

 

இதற்கு பதிலளித்த ஹைதராபாத் அணி 'காத்திருக்கவே வேண்டாம்' என தங்கள் அணியின் முகமது நபி, ஷகிப் அல் ஹசன் மற்றும் ரஷீத் கான் ஆகியோரின் புகைப்படத்தை வெளியிட்டது.

 

இதைப்பார்த்த மும்பை அணி உடனடியாக 3 முறை தாங்கள் கோப்பை வாங்கியதை குறிப்பிடும் வகையில், ஐபிஎல் கோப்பைகளின் புகைப்படத்தை வெளியிட்டது. மேலும் நீங்கள் காத்திருங்கள் எனவும் நக்கல் செய்தது.(ஹைதராபாத் அணி இதுவரை 1 முறை மட்டுமே கோப்பை வென்றுள்ளது)

 

இந்த சண்டைக்கு நடுவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 3 தோனி நடந்து வரும் புகைப்படத்தை பதிவிட்டு மூன்று முகம் என லந்து செய்துள்ளது.(ஒருவேளை உங்கள் அணியின் 3 ஆல்ரவுண்டர்களுக்கு தோனி சமம் என சொல்லியதோ?)

 

இதையெல்லாம் பார்க்கும் போது வரும் ஐபிஎல் போட்டியில் இதுபோன்ற கேலி,கிண்டல், பஞ்சாயத்துகளுக்கு பஞ்சம் இருக்காது போல..