'அம்மாவுக்கு இப்படியும் சர்ப்ரைஸ் கொடுக்கலாம்..ஏனென்றால்?'.. வைரலாகும் மகனின் செயல்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 31, 2019 01:10 PM

அம்மாவின் பிறந்த நாளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்து அசத்திய மகனது வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Man comes from Australia and gives surprise to his mother viral video

அம்மா, அப்பாவை பிரிந்து வெளிநாடுகளில் பணிபுரியும் பிள்ளைகளுக்கு என்னதான் வெளிநாடுகளில் வேலை, சம்பாத்தியம் என்று கைக்கு திருப்தியாக எல்லாம் கிடைத்தாலும், மனம் நிறைவதென்னவோ தாய்நாட்டில்தான், தாய்வீட்டில்தான் என்பது நிதர்சனமான உண்மை.

அப்படித்தான், மகன் ஒருவர் வெளிநாட்டில் இருந்துவிட்டு, வெகுநாட்கள் கழித்து தன் ஊருக்கு வந்திருக்கிறார். ஆனால் தனது அம்மாவிடம் சொல்லாமல், அவர் எங்கே செல்கிறார் என்று தெரிந்துகொண்டு, அவர் செல்லும் இடத்தைக் கண்டுபிடித்துச் சென்றிருக்கிறார்.

ஒருவழியாக தனது அம்மா வந்த மெக்டொனால்ஸ் உணவகத்தில் ஒரு முயல்குட்டி காஸ்டியூமில் அமர்ந்து பலூன்களை வைத்துக்கொண்டு தன் அம்மாவின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். உடனே அருகே சென்ற தனது அம்மாவுக்கு அந்த மகன் எழுந்து நின்று தனது முகமூடியைக் கழட்டிவிட்டு, தனது அம்மாவின் பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்லி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதன் பிறகு அவரது அம்மா மற்றும் உறவினர்கள் அவரை ஆதூரமாய் அள்ளி அணைத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதனைப் பார்த்த பலரும் தெலுங்கில் ட்வீட் செய்திருப்பதால், அந்த மகன் ஆந்திரா பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இதேபோல், எத்தனை கோடி கிடைத்தாலும் இந்த அன்பும் பாசமும் உறவுகளிடம்தான் கிடைக்கும என்று இந்த வீடியோவைப் பார்த்த பலரும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

Tags : #MOTHER #BIRTHDAY #SUPRISE #RELATIONSHIP #SURPRISE #VIRALVIDEO