‘திருமணமான மகன் செய்த காரியம்’.. உருட்டுக்கட்டையால் அடித்துக்கொன்ற அம்மா!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 22, 2019 02:25 PM

குடித்துவிட்டு வந்து பிரச்சனை செய்ததால், பெற்ற மகனையே தாய், உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

mother kills her own son after he drunk and made trouble

தஞ்சாவூர் மாவட்டம்  திருவிடைமருதூர் அருகே வேப்பத்தூர் பெரியார் நகரில் 65 வயதான மாரியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். மாரியம்மாளுக்கு 40 வயது மதிக்கத்தக்க கருப்பையன் என்கிற திருமணமான மகன் ஒருவர் இருந்துள்ளார்.

மதுபோதைக்கு அடிமையான கருப்பையனால் குடும்பத்தில் அடிக்கடி பிரச்சனை வந்துள்ளதாக தெரிகிறது. இதனால் கருப்பையனின் மனைவி அவரைவிட்டு பிரிந்து சென்றுள்ளார்.

இதனையடுத்து தனது தாய் மாரியம்மாளின் வீட்டிற்கு சென்று தொடர்ந்து கருப்பையன் இடையூறு செய்து கொண்டே இருந்துள்ளார். ஒருகட்டத்தில் பொறுமையிழந்த மாரியம்மாள் மதுபோதையிலிருந்த மகன் கருப்பையனை உருட்டுக் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதனால் கருப்பையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் தாய் மாரியம்மாள் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் சரணைடைந்துள்ளார். 

Tags : #MURDER #BIZZARE #MOTHER #ALCOHOL