'பட்டப்பகலில் கல்லூரிக்கு முன் கொடூரம்’.. தொடர்கொலைகளால் சென்னையில் பரபரப்பு!

Home > News Shots > தமிழ்

By Selvakumar | Jan 22, 2019 12:36 PM

பட்டப்பகலில் ஓடஓட விரட்டப்பட்டு நபர்கள் சிலர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம்  சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bizarre in Chennai - Three Murders within a span of day caught on CCTV

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றுக்கு வெளியே ஆட்டோவிலிருந்து சிலர் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கி அருகிலிருந்த ஒரு ஹோட்டலுக்குள் சென்றுள்ளனர். இதைப் பார்த்ததும் ஹோட்டலின் உள்ளே இருந்து ஒரு நபர் வெளியே ஓடிவந்துள்ளார்.

ஆனால் அரிவாள்களுடன் வந்த  நபர்கள் வெளியே ஓடிச்சென்ற நபரை துரத்திக்கொண்டே வந்து அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியே பெரும் பரபரப்பானது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் நடத்திய விசாரணையில்,கொலை செய்யப்பட்டவர் சூளைமேட்டைச் சேர்ந்த குமரேசன் என்பது தெரியவந்ததுள்ளது. குமரேசனின் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் குமரேசன், மாவா வெங்கடேசன் என்பவருடன் சேர்ந்து போதைப்பொருள் சப்ளை செய்துவந்ததாகவும், பின்னர் குமரேசன்,வெங்கடேசனிடமிருந்து பிரிந்து தனியாக தொழில் செய்ய தொடங்கியதால் இரு தரப்புக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை வந்ததாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதனால் பழி வாங்கும் விதமாக குமரேசன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் நடத்திய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூன்று தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடிவருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். இதே போல் சென்னையில் ஒரே நாளுக்குள் அடுத்தடுத்து வெவ்வேறு இடங்களில் மேலும் 2 கொலைகளும் நிகழ்ந்துள்ளதால் சென்னை காவல்துறையினர் தீவிரமாக சிசிடிவி கேமராக்களை சோதனை செய்து வருகின்றனர். 

Tags : #CHENNAI #MURDER #BIZZARE #CCTV