டாஸ்மாக் அழைத்துச் சென்ற தந்தையால் 5 வயது மகனுக்கு வந்த வினை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 03, 2019 04:13 PM
Father takes his 5 year old son to tasmac lost him, CCTV footage

மதுக்கடைக்கு 5 வயது மகனை அழைத்துக்கொண்டு குடிக்கச் சென்ற தந்தை, அடையாளம் தெரியாத சில நபர்களிடம் தன் மகனை தொலைத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சேந்தமங்களம் பகுதியைச் சேர்ந்த குமாராபிரசாத், டாஸ்மாக் கடைக்கு தனது 5 வயது மகன் குமரகுருவை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார்.


மகனை அருகில் வைத்துக்கொண்டு சாராயத்தை வாங்கி சாலையிலேயே நின்று குமாரபிரசாத் குடித்துள்ளார். அதிகம் குடித்ததால் தலைசுற்றி சாலையிலேயே விழுந்து படுத்துள்ளார். இந்த கேப்பில் அவருடைய 5 வயது மகனை அடையாளம் தெரியாத சில நபர்கள் கடத்தியுள்ளனர். மகனை அழைத்துக்கொண்டு சென்ற குமாரபிரசாத் வெகுநேரம் ஆகியும் வராததால் சந்தேகமடைந்த குமாரபிரசாத்தின் மனைவி, தேடிவந்த போது கணவர் சாலையில் விழுந்து கடந்ததை பார்த்ததும் அவரை எழுப்பி மகன் எங்கே என கோபமாக கேட்டுள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த் குமாரபிரசாத்தை திட்டிவிட்டு, மனைவி மற்றும் கணவர் இருவரும் மகனை தேடி கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.


இதனை அடுத்து காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை சோதனை செய்துள்ளனர். அதில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சிறுவனை கடத்திச் செல்வதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததோடு, வழக்கு பதிவு செய்து, கடத்தல்காரர்களை தேடி வருகின்றனர்.

Tags : #CHENNAI #TASMAC #FATHER #LITTLEBOY #KIDNAP #POLICE #CCTV