புத்தாண்டு கொண்டாட்டத்தில் போலீஸை குறிவைத்து இளைஞர் செய்த காரியம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Jan 01, 2019 10:11 PM
New Year - youngster throws beer bottle over Coimbatore police

புத்தாண்டு கொண்டாட்டம் அதிகமானதால் போதையில் வாகனம் ஓட்டிவந்த ஆசாமி ஒருவர் காவல்துறை உதவி ஆணையர் மீது பீர் பாட்டிலை வீசியுள்ள சம்பவம் கோவை, அவிநாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவையில் புத்தாண்டு உற்சாகத்தில் நெரிசலாக காணப்பட்ட அவிநாசி சாலையில் இளைஞர்கள் குவிந்து கொண்டாட்ட தொனியில் இருந்தபோது அவர்களை போலீஸார் தடியடி நடத்தி கலைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பாதுகாப்பு பணி நிமித்தமாக அங்கிருந்த காவல்துறை உதவி ஆணையர் சுந்தர்ராஜன் என்பவர் மீது இளைஞர் ஒருவர் பீர் பாட்டிலை தூக்கி வீசியுள்ளார்.


எனினும் சுந்தர்ராஜன் அதிர்ஷ்டவசமாக அந்த தாக்குதலில் இருந்து காயமின்றி தப்பினார். உடனே அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த அந்த இளைஞரை காவல்துறையினர் மடக்கிப் பிடித்து அடித்துள்ளனர். மேலும் விசாரணையில் அந்த இளைஞர் கோவை சிங்காநல்லூரைச் சேர்ந்த காளீஸ்வரன் என்பவர் என்று தெரியவந்தது. அவரை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #POLICE #TAMILNADU #COIMBATORE #YOUNGSTER