தாலி கட்டிய 2 மணி நேரத்தில் கழட்ட சொன்ன மணமகன்.. மணமகளின் போராட்டம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 28, 2018 05:39 PM
Man refuses his wife after 2 hours of marriage, here is what happened

கடலூர் அருகே சிதம்பரம் சாக்காங்குடியைச் சேர்ந்த வீரபாண்டியனின் 25 வயது மகள் சிலம்பொலி. இவர் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த 28 வயது செல்லதுரை என்பவரை 5 வருடங்களாக காதலித்துள்ளார்.

 

இதனை அடுத்து இருவரும், கடந்த வாரம் கோயிலில் திருமணம் செய்துள்ளனர். அந்த சமயத்தில், மணமகன் செல்லதுரையின் தாயார் தற்கொலைக்கு முயற்சித்ததாக தகவல் வந்ததும், செல்லதுரை தாலி கட்டிய 2 மணி நேரத்தில் மனைவியின் கழுத்தில் இருந்த தாலியை கழட்டிவிட்டு 2 நாட்கள் கழித்து வந்து சிலம்பொலியை அழைத்துச் செல்வதாகச் சொல்லி சென்றுள்ளார்.

 

ஆனால் போனவர் திரும்பி வரவுமில்லை, சிலம்பொலியின் போனை எடுக்கவுமில்லை. அதிர்ச்சியடைந்த சிலம்பொலி போலீசில் புகார் அளித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் செல்லதுரையின் வீடுதேடி சென்று, தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார்.

 

அப்போது சம்பவம் அறிந்து விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள் அவரை சமாதானப்படுத்தி, அடுத்த ஓரிரு நாட்களில் ஊரை கூட்டி பேச்சுவார்த்தை நடத்தியதால் மீண்டும் சிலம்பொலிக்கும் செல்லதுரைக்கும் திருமணம் நடந்துள்ளது. எனினும் செல்லதுரை அவ்வாறு செய்ததற்கான காரணம் விளக்கப்படவில்லை.

Tags : #BIZARRE #MARRIAGE #TAMILNADU #BRIDE #GROOM