ஒரு தலைக்காதலால் 2 முறை முயன்று, 3வது முயற்சியில் இளைஞர் தற்கொலை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 27, 2018 07:50 PM
Man commits suicide after 2 attempts because of oneside love failure

ஒரு தலைக் காதலால் ஒரு மாதமாக மன உளைச்சலில் இருந்த இளைஞர் ஒருவர் இரண்டு முறை தற்கொலைக்கு முயற்சித்து முடியாமல் போகவும், மூன்றாவது முறை தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்டுள்ள சோகமான சம்பவம் கன்னியாகுமரியில் நிகழ்ந்துள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம் புதுவல்காரைக்காடு பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்கிற இளைஞர் ஒரு பெண்ணை ஒரு தலையாக காதல் செய்து வந்துள்ளார். ஏதோ ஒரு காரணத்தால் காதல் கைகூடாத நிலையில் ஒரு மாத காலம் வேதனையில் மனம் வெம்பி போன பிரசாந்த், கடந்த வாரம் குழித்துறை மேற்கு ரயில் நிலையத்தின் தண்டவாளத்தில் ரயில் வரும் நேரம் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.


ஆனால் அப்போது பொதுமக்களால் காப்பாற்றப்படவே, அருகில் இருந்த மார்த்தாண்டம் போலீசாரிடம் அவர்கள் தகவல் அளித்துள்ளனர். பின்னர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், பிரசாந்துக்கு அறிவுரை கூறி பெற்றோர்களுடன் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வீட்டுக்கு போன பிறகு பிரசாந்த் இரண்டாவது முறையாக விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.  அப்போதும் அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று பிரசாந்தின் உயிரை காப்பாற்றியுள்ளனர்.


இந்த நிலையில் இன்று (டிசம்பர் 27) அதிகாலை, அதே ரயில் நிலையத்துக்கு வந்து, யாருமில்லாத நேரம் பார்த்து தண்டவாளத்தில் தலை வைத்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது தற்கொலை எண்ணம் நிறைவேறும் வகையில் ரயில் அவர் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒரு தலைக் காதலால், மூன்று முறை முயற்சித்து மூன்றாவது முறை தற்கொலை செய்துகொண்ட இளைஞரின் மரணம் பலரையும் உருக்கியுள்ளது.