மின்சார ரயிலில் பாலியல் சீண்டல் செய்தவருக்கு பாடம் புகட்டிய பார்வையற்ற சிறுமி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 19, 2018 06:29 PM
Man gets caught while tries to abuse a visually impaired girl in train

மும்பை புறநகர் ரயில் நிலையத்திற்கு உட்பட்ட கல்யாண் பகுதியைச் சேர்ந்த 15 வயது பார்வைத் திறன் அற்ற சிறுமி தனது தந்தையுடன் இரவு 8.15 மணிக்கு ரயில் ஏறி மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக பெட்டியில் பயணம் செய்துள்ளார். அப்போது சிறுமிக்கு தெரியாமல், சிறுமியை அருகில் இருந்த நபர் ஒருவர் பாலியல் சீண்டல் செய்துள்ளார்.

 

யாரோ ஒருவர் தன்னிடம் தகாத முறையில்  நடந்துகொள்வதை தன் நுண்ணுணரும் திறனால் கவனித்த சிறுமி, சாதுரியமாக அந்த இளைஞர் தன் மீது விரல் வைக்கும் நேரமாக பார்த்து அவரது விரலை மடக்கி சுற்றி வளைத்து மண்டியிடச் செய்துள்ளார். அந்த இளைஞர் வலியில் துடித்து அலறியபோதுதான் அருகில் இருந்தவர்கள் இந்த சம்பவத்தை கவனித்துள்ளனர். உடனடியாக அருகில் இருந்த மாதுங்கா ரயில்வே காவலர்களிடம் அந்த இளைஞர் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

 

கம்ப்யூட்டர் மெயிண்டெனன்ஸ் வேலையைச் செய்யும் விஷால் என்கிற அந்த 24 வயது இளைஞர், டிக்கெட் எடுக்காமலும், மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டியில் பயணித்ததாலும் சிறுமியிடம் பாலியல் சீண்டல் செய்ததாலும் கைது செய்யப்பட்டதோடு வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

 

பார்வையற்ற மாற்றுத் திறனாளியாக இருப்பினும்,  பயமின்றி  துணிச்சலோடு தன்னிடம் பாலியல் சீண்டல் செய்த இளைஞரை லாவகமாகவும் கையும் களவுமாகவும் பிடித்த 15 வயது சிறுமி பலரிடையே பாராட்டை பெற்றுவருவதோடு, சிறுமிக்கு மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் தற்காப்புக்கலை தெரியும் என்பது கூடுதல் தகவல்.

Tags : #SEXUALABUSE #TRAIN #MINORGIRL #VISUALLYIMPAIRED #ELECTRICTRAIN