‘ஓடும் பேருந்தில், இளம் பெண் முன் இளைஞர் செய்த காரியம்’.. சின்மயி கண்டனம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Dec 02, 2018 01:45 PM
Man\'s shameless behaviour to a girl in MTC Bus, shares Singer Chinmayi

ஓடும் பேருந்தில் இளம் பெண் முன்னிலையில் நபர் ஒருவர் செய்த பாலியல் ரீதியான அருவெறுக்கத்த காரியத்தினால் அப்பெண் அதிர்ச்சி அடைந்ததோடு, பாடகி சின்மயிக்கு விபரத்தை அனுப்பியுள்ளார். சின்மயி, அதனை தனது வலைப் பக்கத்தில் இதனை பகிர்ந்து தனது விரக்தியையும் அதிருப்தியையும் கேள்விகளையும் கருத்துக்களையும் வெளிப்படுத்தியுள்ளார். 

 

சென்னையில், வழக்கமாக கேளம்பாக்கம் பி19 என்கிற பேருந்து மார்க்கமாக பயணிக்கும் பெண் ஒருவர், பேருந்தில் ஏறியதும், ஹெட்போனை காதில் வைத்துக்கொண்டு, ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்துள்ளார். அவருக்கு நேர் இணையாக, யாரோ இருந்து தன்னை பார்ப்பது போல் முதலில் உணர்ந்திருக்கிறார்.  

 

பொதுவாக இளம் பெண்களை ஆண்கள் பலர் நோட்டமிடுவது புதிதல்ல என்கிற ரீதியில் அதனை கவனத்தில் கொள்ளாமல் இருந்திருக்கிறார். ஆனாலும் தனது ஆழ்மனம் எதோ சொல்லவே, எதேச்சையாக திரும்பி பார்த்தவருக்கு காத்திருந்ததுதான் பேரதிர்ச்சி. 

 

இளம் பெண்ணுக்கு நேர் இணையாக ஜன்னலோர இருக்கையில் அமர்ந்திருந்த அந்த பயணி, இந்த பெண்ணை பார்த்துக்கொண்டே பாலியல் ரீதியான அருவெறுக்கத்தக்க காரியத்தில் ஈடுபட்டிருந்துள்ளார். இதைக் கண்டதும் என்ன செய்வதென்று தெரியாமல் திணறியும், பயந்துமிருக்கிறார் அந்த இளம் பெண். எனினும் அவரின் செயலை மறைமுகமாக வீடியோ எடுத்து பாடகி சின்மயிக்கு அனுப்பி, இந்த விவரங்களையும் அனுப்பியுள்ளார்.

 

மதியம் 1.30 மணிக்கு கூட பெண்கள் சுதந்திரமாக, பயமில்லாமல் நடமாடக் கூடிய சூழல் இல்லாமல், பல இடங்களில் இவ்வாறு நிகழ்வதாகவும் இவற்றையும் இவர்களையும் எவ்வாறு தடுப்பது? என்னதான் செய்வது? என்று கேள்வி எழுப்பி தன் பக்கத்தில் பதிவிட்ட சின்மயி, உலகம் முழுவதும் இவ்வாறு நடப்பதாகவும், ஒரு பெண்ணால் இவற்றை எப்படி எதிர்கொள்ள முடியும் என்றும் கூறியுள்ளார். 

 

Tags : #SEXUALABUSE #CHINMAYI #METOO #TAMILNADU #CHENNAI #MTCBUS