'என்கூட பேச மாட்டியா மெர்சி?’: டீக்கடையில் பெண்ணை கத்தியால் குத்திய இளைஞர்..வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 28, 2018 04:49 PM
man kills his girlfriend in a tea shop, after she refusing to talk

நெல்லைஅருகே திருக்குறுங்குடி மகிழடியை சேர்ந்த ரவீந்திரன் என்பவர் என்ஜினியரிங் படித்துவிட்டு வள்ளியூர் ஜவுளிக்கடை ஒன்றில் பணிபுரிந்துவந்துள்ளார்.  அதே கடையில் பணிபுரிந்து வந்த தக்கல் பகுதியை சேர்ந்த மெர்சியும் ரவீந்திரனும் 5 மாதங்களாக பணிபுரிந்து வரும்போது பழக்கம் ஏற்பட்ட காதல் உண்டாகியுள்ளது.

 

இதனிடையே அண்மையில் வேலைவிட்டு நின்றுவிட்ட ரவீந்திரன் ஊரில் வெட்டியாக சுற்றித் திரிந்ததால், அவர் மீது கோபம் கொண்ட மெர்சி, தான் பழகுவதை குறைத்துக்கொண்டுள்ளார். ஆயினும் அவருக்கு அடிக்கடி போன் செய்து பார்த்த ரவீந்திரன் தன் போனை எடுக்காத மெர்சி மீது ஆத்திரமடைந்ததால், நேற்று முன் தினம் மாலையில் வள்ளியூர் பேருந்து நிலையத்தில் இருக்கும் டீக்கடைக்கு மெர்சியை வரசொல்லி தகவல் அனுப்பியிருந்தார்.

 

அங்கு இருவரும் சந்தித்த பின், முன்பைப் போல் தன்னிடம் பேசாத மெர்சியை பார்த்து ரவீந்திரன் "என்கிட்ட நீ பேசாமல் இருப்பதை என்னால தாங்கிக்க முடியவில்லை.. பழைய மாதிரி நீ என்னுடம் பேசணும் மெர்சி” என்று பேசியுள்ளார். ஆனாலும் மெர்சி தன் கோபத்தை கைவிடாமல், வலுக்கட்டாயமாக பேச மறுத்துள்ளார். மீண்டும் மீண்டும் பேசிக்கொண்டே இருந்த ரவீந்திரன் எதிர்பாராத விதமாக தான் மறைத்துவைத்திருந்த கத்தியை எடுத்து மெர்சியின் கழுத்து மற்றும் வயிற்று பகுதிகளில் சரமாரியாகக் குத்திவிட்டு தப்பியோட முயன்றுள்ளார். ஆனால் அங்கிருந்தவர்கள் பதற்றமாகி ரவீந்திரனை துரத்தி பிடித்து சரமாரியாக தாக்கியதால் அந்த இடம் பரபரப்பானது.

 

எனினும் ரத்த வெள்ளத்தில் மிதந்த மெர்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மெர்சியை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு, ரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : #LOVE #CRIME #SAD #KILLING #MEN #WOMEN #TAMILNADU