முதலாம் ஆண்டு என்ஜினியரிங் மாணவர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 23, 2018 10:04 AM
TamilNadu - Coimbatore Engineering student dead in Students fight

கோயம்புத்தூரில், மலுமிச்சம்பட்டி அருகே உள்ள ஒரு தனியார் - தன்னாட்சி (சுயநிதி) பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வந்த மாணவர்களுக்கும், அண்ணா பல்கலை கழகத்தின் கீழ் முதலாம் ஆண்டு பயின்ற மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது.

 

காலேஜ் உணவு விடுதியில் நிகழ்ந்த இந்த மோதலின்போது ஒருவருக்கொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டதில் முதலாம் ஆண்டு மாணவர் அஷ்ரப் முஹமது கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதக்கவும், அவரது நண்பர்கள் சிலர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும் அம்மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

இதனையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட முதலாம் ஆண்டு மாணவர்களான தினகரன், நிதீஷ்குமார் மற்றும் சரவணக்குமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். பொறியியல் கல்லூரிக்குள்  படிக்கும் வயதில் வன்முறைகளில் ஈடுபட்டு கொலை செய்வதுவரை செல்லும் இம்மாணவர்களுக்கு என்னதான் பிரச்சனை என பல்வேறு தரப்பிலும் விவாதங்கள் எழத் தொடங்கியுள்ளதோடு, இங்கு நிகழ்ந்துள்ள உயிரிழப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #COLLEGESTUDENT #COLLEGESTUDENTS #STUDENTS #MURDER #CRIME #BIZARRE