இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் ஊழியர்கள் இருக்கும் நகரம் இதுதான்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 23, 2018 09:38 AM
Peoples in this City Earns Much Great Annual Income in India

இந்தியாவின் காஸ்ட்லி லிவ்லிஹீட் நகரங்களுள் ஒன்றாக மாறிவரும் பெங்களூரில்தான் ஹை-டெக் தொழில்நுட்பங்களும், மென்பொருள்  மற்றும் தகவல் தொழில்நுட்ப  துறைகளும் நன்கு வளர்ந்துள்ளன. 

 

இங்கு இதுபோன்ற துறைகளுள் இயங்குபவர்கள்தான் இந்தியாவிலேயே அதிகபட்ச ஊதியங்களாக சராசரியாக ஆண்டு வருமானம் ரூ.12 லட்சமும், நுகர்வோர் துறையில் இருப்பவர்கள் சராசரியாக ஆண்டுக்கு ரூ.10 லட்சமும்  சம்பாதிக்கின்றனர். மேலும் நகரக் கட்டமைப்புகளின் அடிப்படையில் பெங்களூர்வாசிகளாகவே மாறிவிட்டவர்கள், வேலை நிமித்தமாக பெங்களூர் வசிப்பவர்களின் வருமானம் சராசரியாக ஆண்டொன்றுக்கு ரூ.11,50,000. 

 

லிங்கடின் எனும் சமூக வலை தளத்தின் ஆய்வு முடிவாக அளிக்கப்பட்டுள்ள அறிக்கையின்படி, நெட்வொர்க் துறைகளில் பணிபுரியும் இவர்களின் சராசரி ஆண்டு வருமானமே 14 லட்சத்து 70 ஆயிரமாக உள்ளது.  இந்த ஆய்வில் இரண்டாம் இடத்தில் மும்பை இடம் பெற்றுள்ளது. இதே போல் சென்னைவாசிகளை பொறுத்தவரை ஆண்டுக்கு சராசரியாக ரூ.6,30,000 சம்பாத்தியத்தை பெறுவதாக இந்த ஆய்வு முடிவு கூறுகிறது. 

Tags : #ANNUAL INCOME #LIFESTYLE #EARNINGS #WAGES #PAY #EMPLOYEE #INDIA #PEOPLE