மூச்சுத் திணறும் கோயம்பேடு, பெருங்களத்தூர் பேருந்து மற்றும் சென்னை ரயில் நிலையங்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 03, 2018 02:33 PM
Milling Crowds in TN Koyambedu and Chennai Perungalathur Bus Stops

நவம்பர் 6-ம் தேதி தீபாவளியை ஒட்டி, தீபாவளிக்கு முதல்நாளான திங்கள் அன்றும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிலருக்கு மட்டும்  மாதத்தில் முதல் சனிக்கிழமை வேலை என்பதால், அவர்களைத் தவிர்த்து பலரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளிலேயே பலரும் வெளியூர் அல்லது சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்லுகின்றனர். இந்த நிலையில் கோயம்பேட்டில் உள்ளிட்ட அனைத்து பேருந்து நிலையங்களிலும் கூட்ட நெரிசல் காணப்படுகிறது.

 

இதுதவிர, கார் உள்ளிட்ட சொந்த வாகனங்களிலும் ஏராளமானோர் புறப்பட்டுச் சென்றனர். இதனால், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அனைத்து பிரதான சாலைகளிலும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நெரிசலை தவிர்க்க, பலரும் மெட்ரோ ரயில்களை பயன்படுத்தியதால், மெட்ரோ ரயில்களிலும் நேற்று மாலை அதிக கூட்டம் இருந்தது. பேருந்து, ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

மேலும் கோயம்பேடு 100அடி சாலை, பெருங்களத்தூர் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். தவிர இன்று மட்டும் சென்னையில் சுமார் 11 ஆயிரம் வெளியூர் பேருந்துகள் சராசரியாக உள்ளே வந்து செல்வதாகக் கூறப்படுகிறது. இதேபோல் ரயில் நிலையங்களிலும் கூட்ட நெரிசல்கள் காணப்படுவதால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

Tags : #BUSRUSH #FESTIVALS #SEASONS #THRONGS #PEOPLE #CROWD #BUSSTOPS #CMBT #KOYAMBEDU