இந்திய கிரிக்கெட்டின் ஹிட்மேன் ‘கேமிராமேனாக மாறிய மொமண்ட்’.. ட்விட்டரில் வைரலாகும் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 23, 2018 09:18 AM
This Indian Cricketer Becomes Camera Man Moment Video goes Viral

அண்மையில் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் மனீஷ் பாண்டேவை, ரோஹித் சர்மா வெவ்வேறு கோணங்களில் படம் பிடிக்கும் வீடியோ ட்விட்டரில் வெளியாகி ட்ரெண்டிங்கில் உள்ளது.

 

மூன்று டி20, 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளை உடைய தொடர் கிரிக்கெட் ஆட்டங்களில் விளையாடி வரும் இந்திய அணி, முதல் டி20 போட்டியில் தோல்வி அடைந்ததையடுத்து ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர். 

 

இந்த நிலையில்தான், இத்தனை ரணகளத்துக்கும் நடுவில்  இந்திய அணியின் ‘ஹிட்மேன்’ ரோஹித் ஷர்மா, ஏறத்தாழ முழுதாய் ஒரு கேமராமேனாகவே மாறிய மொமண்ட் நிகழ்ந்துள்ளது. விளம்பரத்துக்காக மனீஷ் பாண்டேவுக்கு ஒரு புகைப்பட ஷூட் நிகழ்ந்து முடிந்ததும், அந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்குள் வரும் ரோஹித் ஷர்மா, தன் மொபைலில் மனீஷ் பாண்டேவை படம் பிடிக்கத் தொடங்கியுள்ளார்.

 

விதவிதமாக போட்டோ எடுத்த ரோஹித், அந்த தருணத்தில் ஒரு கைதேர்ந்த கேமராமேன் போலவே நடந்துகொண்டுள்ளார்.  இந்த வீடியோவை இந்திய கிரிக்கெட் வாரியம் தனது ட்விட்டர் பக்கத்தில், ’ஹிட்மேன் கேமராமேனாக மாறியபோது’ என்ற வாசகத்தைச் சேர்த்து பதிவிட்டுள்ளது.

 

Tags : #CRICKET #INDIA #HITMAN #CAMERAMAN #VIRAL #VIDEO #ROHIT SHARMA