கணவரை தோசைக்கல்லால் அடித்துக்கொன்ற மனைவி; கிணற்றில் வீசிய காதலர்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 20, 2018 08:03 AM
This Wife who have affair Kills Husband by hitting Dosa Tawa

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உப்புக்கிணறு பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் - ஐஸ்வர்யா தம்பதியர் தமது இரு மகள்களையும் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியின் விடுதியில் சேர்த்து படிக்க வைத்து வந்துள்ளனர். 

 

கிரானைட் ஆலையில் கல் அறுவை செய்யும் செல்வகுமார், தனது மனைவி ஐஸ்வர்யாவுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவருக்கும் தொடர்பு இருப்பதை அறிந்ததும் மனைவியை கண்டித்ததால் கணவன் - மனைவி இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

இதில் ஆத்திரமடைந்த மனைவி ஐஸ்வர்யா, தன் கணவர் செல்வகுமாரை தோசைக்கல் கொண்டு தாக்கியதால், செல்வகுமார் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த ஐஸ்வர்யா, பயத்தில் தன் காதலர் ரவிக்கு தகவல் அளித்துள்ளார். ரவியும் ஐஸ்வர்யாவும் செல்வகுமாரின் உடலை துணிகொண்டு சுற்றி, கயிற்றில் கல்லைக் கட்டி கிணற்றில் வீசியுள்ளனர். 

 

ஆனால் செல்வகுமாரை பற்றி அக்கம் பக்கத்தினர் ஐஸ்வர்யாவை விசாரிக்க, ஐஸ்வர்யாவோ தனது கணவர் வேலை நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளதாகக் கூறி சமாளித்துள்ளார். எனினும் கிணற்றில் துர்நாற்றம் வீசத் தொடங்கியதை அறிந்த பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில் ஐஸ்வர்யாவிடம், சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தியதில் ஐஸ்வர்யா உண்மையை ஒப்புக்கொண்டுள்ளதை அடுத்து ஐஸ்வர்யாவும், ரவியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : #AFFAIR #TAMILNADU #SELAM #CRIME #MURDER #DOSATAWA #WIFE #HUSBAND #KILLS