கஜா புயல் தாக்கிய மாவட்டங்களில் அபராதம் இன்றி மின் கட்டணம் செலுத்தும் தேதி நீட்டிப்பு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 19, 2018 08:03 PM
TNEB extends due date for those districts affected by Gaja cyclone

கஜா புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய இரு மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதனை அடுத்து கடலூர், நாகை, திருவாரூர், சிவகங்கை, தஞ்சை,ராமநாதபுரம்,புதுக்கோட்டை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

 

அடிப்படை தேவைகளான உணவு, உடை, இருப்பிடத்துக்கும் நிவாரணங்களை நம்பியுள்ள நிலையில், ஆங்காங்கே மின் கம்பங்கள் அறுந்து விழுந்து பல இடங்களில் மின்சார தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் கஜா புயல் பாதித்த நாகை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் செலுத்த வேண்டிய மின் கட்டணங்களை எவ்வித அபராதமுமின்றி நவம்பர் 30-ம் தேதி வரை செலுத்தலாம் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

Tags : #GAJACYCLONE #HEAVYRAIN #TNEB #TAMILNADU