ஓசூர் காதல் தம்பதி ஆணவப்படுகொலை வழக்கில் போலீசார் தனிப்படை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 18, 2018 02:45 PM
TamilNadu Police impose New Team to deal Hosur Honour Killing Case

ஓசூர் அருகே காதல் தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை பிடிக்க தனிப்படை அமைத்துள்ளன.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த வெங்கடேஷ்புரம் பகுதியை சேர்ந்தவரும் ஐடிஐ படித்தவருமான நந்தீஷ் கிருஷ்ணகிரியில் உள்ள மகளிர் கல்லூரியில் பயின்று வந்த ஸ்வாதியை  கலப்புத் திருமணம் செய்துகொண்டதை அடுத்து கர்நாடக மாநிலம் மாண்டியா அருகே உள்ள மலஹள்ளிப் பகுதி காவிரி ஆற்றில் இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

 

இதனை அறிந்த ஸ்வாதியின் தந்தை சீனிவாசன் உள்ளிட்டோர் கிருஷ்ணகிரி எஸ்பி அலுவலகத்தில் சரணடைந்தனர். தொடர்ந்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த நிலையில் பெண்ணின் தந்தை சீனிவாசன் உட்பட 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில் மேலும் 3 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

Tags : #HONOURKILLING #TAMILNADU #KRISHNAGIRI