ஐபோன் வாங்க, குளியல் தொட்டியில் 350 கிலோ சில்லறைகளை எடுத்து வந்த நண்பர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 18, 2018 02:14 PM
Friends Plans To Buy An iPhone With Bathtub Full Of Coins Insta viral

ஐ போன் வாங்கும் கனவுகள்  எல்லாருக்கு இருக்கும். ஒரு புறம் ஐபோன்களை திருடுபவர்கள் இருக்கும் பட்சத்தில் இன்னொரு புறமோ ஐபோன் வாங்கும் தங்களது கனவை நிறைவேற்றுவதற்காக சிறுக சிறுக பணம் சேமித்து, அதில் வாங்கும் ஐபோனை பார்த்து மனம் நெகிழுபவர்களும் உண்டுதான். 

 

அப்படித்தான் ரஷ்யாவில் ஒரு நண்பர்கள் குழு, தாங்கள் சேமித்து வைத்த சில்லறைகளை ஒரு பெரிய நீண்ட குளியலறை தொட்டியில் போட்டு எடுத்து வந்துள்ளனர். 

 

சரியான பணத்தைக் கொடுத்து மட்டுமே போனை வாங்க முடியும் என்கிற அந்த ஷோ ரூம், முதலில் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தாலும், பின்னர்  பாத்டப் ஒன்றில் 350 கிலோ எடையுள்ள முழுமையாக 1 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய்க்கான சில்லறைகளை கொட்டி  எடுத்து வந்துள்ளதை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளனர். 

 

இந்த சில்லறைகளை எண்ணுவதற்கே 2 மணி நேரம் எடுத்துக்கொண்ட ஷோ ரூம் மேலாளர்கள், பிறகு  ஐபோன் வாங்க வந்த நண்பர்களுக்கான அந்த 256 ஜிபி ஐபோன் எக்ஸ் மாடலை கொடுத்துள்ளனர். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.  

 

Tags : #IPHONE #RUSSIA #BUZZ #VIRAL #VIDEO #INSTAGRAM #INSTA #BIZARRE