குழந்தையை சாதூர்யமாக கடத்திய பெண்: 10 வயது சிறுவனின் சமயோஜிதம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 14, 2018 01:59 PM
10-year-old Mumbra boy chases kidnapper to save brother

மகாராஷ்டிராவில் மும்ப்ரா எனும் இடத்தில் ஒரு திருமண வீட்டுக்கு வெளியில் நண்பகல் நேரத்தில் விளையாண்டு கொண்டிருந்த மூன்று சிறுவர்களில், 2 வயது குழந்தையும் அந்த குழந்தையின் 12 வயது மாமாவும்10 வயது அண்ணனும் என மூவரும் விளையாடிக் கொண்டிருந்தனர். 

 

அப்போது அங்கு வந்த பெண்மணி ஒருவர் 2 வயது குழந்தை தனியே நகரும்போது அந்த குழந்தையிடம் சென்று பேசி குழந்தையை கடத்தியுள்ளார். அந்த சமயம் அந்த பெண்ணை கண்ட குழந்தையின் மாமாவான 12 வயது சிறுவன் அந்த பெண்ணிடம் குழந்தையை எங்கு தூக்கிக்கொண்டு செல்கிறீர்கள் என்று கேட்டுள்ளான். 

 

அதற்கு அந்த பெண் குழந்தைக்கு சாக்லேட் வாங்கித் தரப்போவதாகக் கூறவும், சந்தேகப்பட்ட சிறுவன் குழந்தையின் 10 வயது அண்ணனிடம் சென்று சொன்னதும், அந்த பெண்மணி சென்ற வழித் தடத்தில் சென்று அந்த பெண்ணைப் பார்த்து கேள்வி எழுப்பியுள்ளார். உடனடியாக அந்த பெண் குழந்தையை தூக்கிக் கொண்டு ஓடத் தொடங்கியுள்ளார். அந்த பெண்மணியை 8 நிமிடங்கள் துரத்தி தன் தம்பியினை காப்பாற்றியுள்ளார். சிசிடிவி வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : #VIRAL #CCTV #KIDNA #HERO