எஜமானருக்காக 80 நாட்களுக்கு மேல் சாலையில் காத்துக்கிடக்கும் வளர்ப்பு நாய்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 13, 2018 05:11 PM
this sincere Dog waits for its Owner whose no more viral video

நாய்கள் என்றாலே விசுவாசமானவை, நன்றி உள்ளவை என்பது பலருக்கும் தெரியும். தங்களின் வாழ்க்கை அனுபவத்திலும் அதன் பலனை பலரும் பார்த்திருப்பார்கள். செல்ல பிராணிகளை நாம் வளர்க்கத் தொடங்கிவிட்டோம் என்றால், அவற்றிற்கான உலகம் என்று ஒன்று புதிதாய் உருவாகும்.

 

இவற்றில் நாய்களுக்கான உலகமாக வளர்ப்பாளர் மாறிவிடுவார். அவற்றின் அதிகபட்ச செயல் முனைப்புகள் எல்லாமே தன் எஜமானரை கண்ணும் கருத்துமாக கவனிப்பதாகத் தான் இருக்கும். விளையாட்டு, பொழுதுபோக்கு என்று நேரத்தை கடத்துவதும் அவருடனாகத்தான் இருக்கும். அப்படி இருக்கும் ஒரு செல்லப்பிராணி தன் வளர்ப்பாளரை தொலைத்துவிட்டு தனிமையில் அமர்ந்திருக்கும் கொடுமையான வீடியோ ஒன்றுதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.  

 

சீனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம், வாகன விபத்தில் இறந்து போன தனது வளர்ப்பாளர் மீண்டும் திரும்பி வந்து தன்னுடன் இருப்பார் என எண்ணி கண்ணீருடன் சாலையோரம் காத்திருக்கும் நாய் ஒன்றின் வீடியோதான் வைரலாகி வருகிறது. ஏறத்தாழ 80 நாட்களுக்கு மேல், தனது எஜமானர் விபத்தில் இறந்துபோன இடத்துக்கு வந்து காத்திருந்துவிட்டு செல்லும் இந்த நாய்தான் எஜமானர் வீட்டு பெண்ணுக்கு காவலாகவும் இருந்து வருகிறது.

 

Tags : #BUZZ #DOG #CHINA #VIRAL #VIDEO