‘நான் யார் தெரியுமா?: எனக்கு ஒரு கோப்பை ஒயின் கிடையாதா?’: விமானத்தில் ஒயின் கேட்டு சண்டையிடும் பெண்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 14, 2018 06:06 PM
Drunk woman abuses Air India crew for alcohol, Spits at pilot

மும்பையில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பிசினஸ் கிளாஸில் பயணம் செய்த அயர்லாந்து பயணியும் வழக்கறிஞருமான பெண்மணி மேற்கொண்டு ஒயின் கொடுக்கச் செல்லி கேட்டு தகராறு செய்து, விமான பணியாளர்களை கடுமையான வார்த்தைகளைச் சொல்லி திட்டிய சம்பவம் வைரலாக வீடியோவில் பரவி வருகிறது.

 

நிர்ணயிக்கப்பட்ட மதுவைத் தாண்டி மது கேட்ட இந்த பெண்மணிக்கு விமான ஊழியர்கள் மதுவை தரமறுத்ததை அடுத்து அவர் வம்படியாக விமானத்தில் இருந்த மதுவை எடுத்து அருந்தியதால் ஆத்திரமடைந்த ஏர் இந்தியா ஊழியர்கள் கேள்வி கேட்டுள்ளனர். அவர்களையும் கடுமையான அநாகரிமான வார்த்தைகளால் போதையில் 40 நிமிடங்கள் திட்டிய இந்த பெண்மணியின் 40 விநாடி வீடியோதான் வைரலாகி வருகிறது. 

 

அதில், ‘நான் யார் தெரியுமா? எவ்வித பண பராபலனும் எதிர்பார்க்காமல், சர்வதேச அளவில் உங்களுக்காகவும் மக்களுக்காகவும் குரல் கொடுக்கும் எனக்கு ஒரு கோப்பை ஒயின் தர மாட்டீர்களா?’ என்று அர்த்தம் வருமாறு கேட்டு கடும் வார்த்தைகளால் பேசியுள்ளார். 

Tags : #VIRAL #VIDEO #BIZARRE #BUZZ #AIRINDIA #FLIGHT #AIRPLANE