போனை தட்டி தூக்கிய திருடர்கள்: பறிக்க முயன்ற ரயில் பயணி பலி!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 16, 2018 03:18 PM
Man dies Accidentally while trying to get back from thieves

மேற்கு வங்கத்தில் இருந்து வந்த கொரமண்டல் எக்ஸ்பிரஸில் பயணம் செய்து வந்த சதீஸ்வரன், நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்தினை ரயில் அடையும்போது, படியில் அமர்ந்து செல்போன் பேசிக்கொண்டே பயணம் செய்ய தொடங்கியுள்ளார். அந்த சமயம் பிளாட்பார்மில் நின்றுகொண்டிருந்த கார்த்தி, விஷ்ணு உள்ளிட்ட 4 வாலிபர்கள்  கம்பு ஒன்றை கையில் வைத்துக்கொண்டபடி சதீஸ்வரனின் செல்போனை தட்டிவிட்டுள்ளனர். 

 

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே நிகழ்ந்த இந்த செல்போன் பறிப்பு சம்பவத்தினை தொடர்ந்து, செல்போனை மீட்கும் நோக்கில், கோபத்துடன் சதீஸ்வரன் ரயிலில் இருந்து எகிறித் தாவ முயற்சித்துள்ளார். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக சதீஸ்வரன் தவறிப்போய் உயிரிழந்தார். இதில் கார்த்திக், விஷ்ணு இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமிருவர் தேடப்பட்டு வருகின்றனர். 

Tags : #TRAINACCIDENT #TRAIN #TAMILNADU #BIZARRE #CHENNAI #THEFT #THIEVES