'பாராட்டாமல் இருக்க முடியவில்லை'.. தமிழக அரசை வாழ்த்தும் பிரபலங்கள்!

Home > News Shots > தமிழ்

By Manjula | Nov 16, 2018 02:45 PM
#GajaCyclone: TN Government really impressed, says Netizens

கஜாவின் கோரத்தாண்டவத்திற்கு தமிழகம் முழுவதும் இதுவரை சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு தேவையான முன்னேற்பாடுகளை செய்தும் உயிர்பலி ஏற்படுவதை தடுக்க முடியவில்லை.

 

அதே நேரம் களத்தில் இரவும் முழுவதும் அமைச்சர்கள், அதிகாரிகள், மீட்புப்பணி வீரர்கள் ஆகியோர் பொதுமக்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொடுத்து வருகின்றனர்.

 

தமிழக அரசுடன் கைகோர்த்து ஊடகங்களும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருகின்றன. வழக்கமாக புயல், பேரிடர் சமயங்களில் அரசின் செயல்பாடுகள் விமர்சனத்திலிருந்து தப்பாது.

 

அதனை மாற்றி இந்த முறை அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், பிரபலங்கள் ஆகியோர் பாராட்டும்படி தமிழக அரசின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. அதிலிருந்து ஒருசில ட்வீட்களை இங்கே தொகுத்துக் கொடுத்திருக்கிறோம்.