கஜா: அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப அறிவுறுத்தல்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 15, 2018 01:44 PM
TN Govt asks employees to go home and be safe before cyclone starts

இன்று இரவு 8 மணி முதல் 11 மணிக்குள் கஜா புயல் கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர், நாகை, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேல் மழை பெய்யும் என்றும் தெரிவித்திருந்ததை அடுத்து  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுப்பும், பல்கலைக் கழகத் தேர்வுகள் தள்ளிவைக்கப்பட்டும் உத்தரவிடப்பட்டுள்ளன. 

 

இந்த நிலையில் ‘கடலூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருவாரூர்’ ஆகிய மாவட்டங்களில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களை மாலை 4 மணிக்கு முன்பாக வீட்டுக்கு அனுப்ப தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 

Tags : #GAJACYCLONE #RAIN #HEAVYRAIN #OFFICE #COMPANY #LEAVE