ஜன்னல் ஓர இருக்கைக்காக அடம் பிடித்த பயணி: விமான ஊழியர் செய்த காரியம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 16, 2018 12:03 PM
flight attendant finds a brilliant way to deal with a passenger

பேருந்தில் ஜன்னல் சீட்டுக்கு முந்திக்கொள்பவரின் மனநிலைக்கு சற்றும் ஈடு இணையற்றதுதான் விமானத்தில் பயணிக்கும்போது ஜன்னல் சீட்டு வேண்டும் என அடம் பிடிப்பவரது மனநிலை.என்னதான் நமது சீட் என்று முன்கூட்டியே புக் பண்ணிக்கொண்டாலும், அதில் சில சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக மாற்றங்கள் நிகழ்வது வழக்கம்தான். எனினும் என் இருக்கை எனக்கு வேண்டும் என அடம் பிடிப்பவர்களும் உண்டு.

 

இப்படித்தான் அண்மையில் ஜப்பானின் விமானம் ஒன்றில், பயணித்த பயணி ஒருவர், ‘தனக்கு ஜனன்ல் அருகேயான இருக்கை வேண்டும்’ என அடம் பிடித்துள்ளார். அவரை சமாளிக்க முடியாத அந்த கமர்ஷியல் விமான பயணத்தின் பிளைட் அட்டெண்டரான விமான பணிப்பெண், ஒரு காகிதத்தில் வானத்தில் மேகங்கள் மிதப்பது போல் வரைந்து ஜன்னலின் மீது ஒட்டியுள்ளார்.

 

பள்ளி காலங்களில் அடம் பிடிக்கும் குழ்ந்தைகள் இருவருக்குமே அவர்கள் வேண்டுவது கிடைக்காதபடி ஒரு தீர்வு கொடுப்பார்களே? அப்படியான ஒரு தீர்வுதான் இதுவும். எது எப்படியோ இந்த விமான பணிப்பெண்ணின் புத்திசாலித்தனமான இந்த தீர்வு, புகைப்படமாக இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #VIRAL #FLIGHT #AIRPLANE #FLIGHT ATTENDANT #PASSENGER #JAPAN