கஜா புயலுக்கு பின் அடுத்து 3 நாட்களுக்கு மழை: தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 18, 2018 02:58 PM
TamilNadu Weatherman Reports about Rain in and around TamilNadu

தமிழகத்தை கஜா புயல் சூறையாடியதை அடுத்து தமிழ்நாட்டில் தொடர்ந்து ஓரிரு நாட்கள் மழை நீடித்திருந்தது. எனினும் கஜா புயல் அடுத்து கேரளாவை குறிவைப்பதாக தகவல்கள் வந்தன. 

 

இந்த நிலையில் வரும் நவம்பர் 20 முதல் 22 வரை டெல்டா மற்றும் சென்னை பகுதிகளில் கஜா புயலுக்கு பின் மழை பொழியாமல் இருந்த இடங்களில் மழை பொழியும் என்றும்,  காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னையில் நவம்பர் 20 முதல் 22 வரை மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார். 

 

மேலும் தற்போதைய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக  கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி பகுதிகளில் மழை பொழியும்  என்றும் வடக்கு தமிழகத்தில் நல்ல மழை பொழியும் என்றும் கூறியிருக்கிறார். 

Tags : #GAJACYCLONE #RAIN #HEAVYRAIN #TAMILNADU #WEATHERMAN