கனமழை காரணமாக இந்தந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஆட்சியர்கள் உத்தரவு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 20, 2018 06:51 AM
Holiday for school,college of these Districts due to heavy rain

தமிழகத்தை புரட்டிப் போட்டுள்ள கஜாவின் கோர தாண்டவம் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூர் மாவட்டங்களில் மேலோங்கி இருந்தது. இந்த நிலையில் இம்மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களை பொறுத்தவரை உயிர் சேதங்கள் தொடங்கி, மரங்கள், மின் கம்பங்கள் என எல்லாமும் சேதம் அடைந்துள்ளன. இவற்றை சரிசெய்யும் பொருட்டு நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும், திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். 

 

இதனிடையே இன்று நிகழவிருந்த பாலிடெக்னிக் கல்லூரி தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வரும் 26-ம் தேதி அன்றும், இன்று நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக் கழகத் தேர்வுகள்  டிசம்பர் மாதமும்,மற்றபடி கிண்டி பொறியியல் கல்லூரி தேர்வுகள் உட்பட்ட பிற பல்கலைக் கழக தேர்வுகள் தொடர்ந்து குறித்த நேரத்தில் மாற்றமில்லாமல் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #GAJACYCLONE #HEAVYRAIN #EXAM #TAMILNADU