இளைஞனை வெட்டி ஊருக்குள் தலையையும்; ஆறுக்குள் உடலையும் வீசிய மர்ம நபர்கள்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 19, 2018 08:54 PM
shocking incident- 20yr old Tirunelveli mans head was found at public

திருநெல்வேலி அருகே வெட்டப்பட்ட தலை பொது இடத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கிடத்தப்பட்டிருந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

சுமார் 20 வயது மதிக்கத்தக்க, ஒரு இளைஞனின் தலை பொது இடத்தில், வெட்டப்பட்டு கிடந்ததை கண்டு அனைவரும் அஞ்சத் தொடங்கிய பிறகு, போலீசார், மோப்ப நாய்களின் உதவியுடன் விசாரணை செய்தபோது, அவரது மீதி உடல் தாமிரபரணி ஆற்றில் வீசப்பட்டிருந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிவந்துள்ளது.

 

விசாரித்ததில் திருநெல்வேலி பகுதியில் உள்ள வீரமாணிக்கபுரத்தை சேர்ந்த பால்துரைதான் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. தன் தாயுடன் பேருந்தில் வந்த பால்துரை, பேருந்தில் இருந்து இறங்கியவுடன் காணாமல் போய், அடுத்த நாள் அவரது தலை தனியாகவும், உடல் தனியாகவும் வெவ்வேறு இடங்களில் வீசப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை அச்சத்தையும் அப்பகுதி மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகள் யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : #TIRUNELVELI #MURDER #CRIME #TAMILNADU #POLICE #20YEAROLD #YOUNG