குழந்தை பேறு இல்லாத மனைவி, புத்தி சொல்லாத மாமியார் இருவரையும் கொன்று கணவர் தற்கொலை!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 14, 2018 04:57 PM
TN Man Kills wife and mother-in-law and gets suicide

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குடும்பத் தகராறில் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டுள்ள தச்சு தொழிலாளர் கணவரின் செயல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

பொள்ளாச்சி அருகே சிடிசி காலனியில் வசித்து வந்த தச்சுத் தொழிலாளி பாபு. அவருடைய மனைவி சுமதி இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகியதை அடுத்து சில ஆண்டுகள் கழித்து, குழந்தைப் பேறு இல்லாததால் உருவான தகராறுகள் மற்றும் மனஸ்தாபம் காரணமாக கணவரிடம் இருந்து பிரிந்த சுமதி தன் தாய் விசாலாட்சியுடன் வசித்துவந்தார். 

 

எனினும் அடிக்கடி சுமதி வசித்து வந்த அவரது தாயார் வீட்டுக்கு சென்று சுமதியிடமும் அவரது தாயாருடனும் தகராறில் ஈடுபட்டுள்ளார். தான் சொல்வதை கேட்டு மகளுக்கு புத்தி சொல்லச் சொல்லி விசாலாட்சியிடம் கூறி, அதனை ஏற்க மறுத்ததால் தன் மாமியாரையும், தனது மனைவியையும் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர். 

Tags : #MURDER #CRIME #FAMILYPROBLEM #COIMBATORE #KILL