3 வயது குழந்தையை நரபலி கொடுத்த பெண்: திடுக்கிடும் காரணம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 05, 2018 10:43 AM
Women Kills 3 Year old baby after believing Black magic

புதுக்கோட்டை அருகே நரபலி கொடுத்தால் மாந்திரீக சக்தி அதிகரிக்கும் என நம்பி அநியாயமாக 3 வயது குழந்தையை கொன்ற பெண்மணி அப்பகுதியினரையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதோடு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளார். 

 

புதுக்கோட்டை அருகே இலுப்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ள இந்த கோர சம்பவத்தால் பலியான குழந்தைக்கு 3 வயது. பிலிசூனியம் அல்லது பிளாக் மேஜிக் எனப்படும் முறையில் குறிப்பிட்ட அம்சங்கள் உள்ள குழந்தையை நரபலி கொடுத்தால் மாந்திரீக சக்தி அதிகரிக்கும் என்கிற நம்பிக்கையின் காரணமாக 3 வயது குழந்தையை கழுத்தறுத்து கொன்று கொலை செய்துள்ள சின்னபிள்ளை என்கிற பெண்மணியை போலீசார் கைது செய்து  மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags : #MURDER #CRIME #HUMANSACRIFICE #BLACKMAGIC