மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை.. பேராசிரியரை கண்டித்து போராட்டம்!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 19, 2018 07:40 AM
professor blamed for death of 20 year student who jumps to suicide

பொறியியல் கல்லூரியில் 3ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்து வந்து மாணவர், ஆசிரியரின் துன்புறுத்தலால் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக கூறப்படுவது பொறியியல் கல்லூரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கர்நாடகாவின் மங்களூரு நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் 3-ம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினியர் படித்து வந்த 20 வயது மாணவர் ஆனந்த் பட்டக். இவருக்கு வருகை சதவீதம் குறைவாக இருந்துள்ளதை அடுத்து அவர் அடுத்து வரவுள்ள செமஸ்டர் தேர்வில் அவர் ஃபெயில்தான் ஆகப் போகிறார் என அவரிடம் அவரின் பேராசிரியர் கூறியுள்ளார். 

 

பேராசிரியரின் இந்த கண்டிப்பான வார்த்தைகளில் மனம் உடைந்துபோன மாணவர்  தனது துறையின் புளோரில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை அடுத்து, அங்கு மாணவர்களின் போராட்டம் வலுத்துக்கொண்டு வருகிறது. பொறியியல் மாணவரின் தன்னம்பிக்கையை குலையச் செய்த பேராசிரியருக்கு எதிரான முழக்கங்களை அக்கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் வெளியிட்டனர்.  

Tags : #SUICIDEATTEMPT #COLLEGESTUDENT #STUDENTS #EXAM #PROTEST #MANGALORE #ENGINEER