சிசிடிவி கேமராவையே திருடிய நூதன கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 20, 2018 10:11 AM
Thieves Steals CCTV Surveillance Cameras in chennai keezhkattalai

தமிழ்நாட்டை பொருத்தவரை சிசிடிவி கேமராக்களை கட்டாயமாக எல்லா இடங்களிலும் பொருத்த வேண்டும் என காவல் துறை தீவிரமாக ஆணையிட்டு கண்காணித்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு இடங்களில் நிகழ்ந்தேறிய நிறைய திருட்டு, செயின் பறிப்பு, தப்பியோட்டம், கொலை, மறைப்பு சம்பவங்கள் பலவும் சிசிடிவி கேமராமூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

ஆனால் காவல்துறையின் உற்ற நண்பனாக இருக்கும் இந்த சிசிடிவியையே திருடிவிட்டால், யாரால் என்னத்தை கண்டுபிடிக்க முடியும் என எண்ணிய நூதன கும்பல் ஒன்று, சென்னை கீழ்க்கட்டளை பகுதிக்குட்பட்ட அபார்ட்மெண்ட் ஏரியாவில் உள்ள சிசிடிவி சர்வலைன்ஸ் கேமராக்களையே திருடியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவத்தை நடத்தியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருவதோடு, ஒரு திருட்டு சம்பவத்துக்கு அடித்தளமாகவே அந்த கும்பல் இதனை செய்திருப்பதால் குறிப்பிட்ட இந்த பகுதியில் பாதுகாப்பையும் பலப்படுத்தி வருகின்றனர்.

Tags : #CCTV #CHENNAI #TAMILNADU #CRIME #THIEVES #THEFT #BUZZ #BIZARRE #VIRAL