ரயிலின் அடியில் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயற்சித்தபோது நடந்த விபரீதம்:வைரல் வீடியோ!

Home > News Shots > தமிழ்

By Siva Sankar | Nov 19, 2018 07:01 PM
Man lies down on tracks while train passes over his head viral video

ரயில் கடக்கும்போது தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவர் ஏதும் ஆகாமல், ரயில் கடந்துசென்று முடியும்வரை, காத்திருந்து உயிரை கையில் பிடித்துக்கொண்டு தப்பித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. 

 

ஆந்திராவில் அனந்தபூர் ரயில் நிலையத்தில்தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது, அங்கு வந்த லக்னோ - எஸ்வந்த்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2-ம் நடைமேடையில் இறங்கியவர், முதலாம் நடைமேடைக்கு செல்ல மேம்பாலத்தை பயன்படுத்தாமல், தண்டவாளத்தை கடந்து செல்ல யோசனை செய்துள்ளார். 

 

ஆனால், அதிலும் ஒரு படி மேலே சென்று மூர்க்கத் தனமாக, நின்றுகொண்டிருந்த ரயிலின் அடியில் புகுந்த அடுத்த நடைமேடையை அடையலாம் என்று முடிவெடுத்து ரயிலின் சக்கரத்தடியில் நுழைந்துள்ளார். 

 

ஆனால் எதிர்பாராத விதமாக ரயில் இயங்கத் தொடங்கியுள்ளது. அப்போது செய்வதறியாது தவித்த அந்த நபர், தன் உடலை தண்டவாள பாதைக்கு நடுவில் உள்ள தரையோடு தரையாக ஒட்டிக்கொண்டபடி ரயில் தன் மீது ஏறிச்செல்லும் அந்த சில நிமிடங்களை அப்படியே காத்திருந்து சகித்துக்கொண்டார். 

 

பின்னர் ரயில் முழுமையாக சென்ற பின்னர் தலையை தூக்கி பார்த்து எழுந்து வந்தவர், உடலில் சிறு காயம் கூட இல்லாமல் நடந்து வந்ததை பார்த்த பலரும் ஆச்சரியப்பட, அதில் ஒருவர் இதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவு செய்யவும், வீடியோ வைரலாகி வருகிறது. 

 

Tags : #VIRAL #VIDEO #CLIP #TRAIN #BUZZ #LUCKILY #MEN #RAILWAY